காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-11-17 19:15 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொறுக்கையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் வீரசேகரன், இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அனுஷ் மித்ரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலவன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்த், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர செயலாளர் தமிழ்மணி, நகர தலைவர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கல்லூரி முதல்வர் மற்றும் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்