திருவாரூரில், சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில், சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோரின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் திருவாரூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மத்திய சங்க துணைத்தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சங்க நிர்வாகிகள் அமல்தாஸ், சந்திரசேகரன், செந்தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.