ஆக்கி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

ஆக்கி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-07-20 18:57 GMT

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட ஆக்கி பெண்கள் அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ரூ.9 லட்சம் பரிசு தொகையும் பெற்றது. அந்த அணியை சேர்ந்த 18 மாணவிகள் மற்றும் பயிற்றுனர்களுக்கு பாராட்டு விழா சிவகங்கை சுவாமி விவேகானந்தா உயர்நிலைப்பள்ளியில் பள்ளி செயலர் சங்கரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆக்கி கழக செயலாளர் தியாக பூமி அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், கேப்டன் சரவணன், பகீரத நாச்சியப்பன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் அழகுமீனாள் தேவதாஸ், சின்னையா அம்பலம், சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவஹர் கிருஷ்ணன், செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வெற்றி பெற்ற 18 மாணவிகள், பயிற்சியாளர்களுக்கு கேப்டன் சரவணன் சார்பில் பாராட்டு விருதும், கலைஇலக்கிய பெருமன்றத்தின் சார்பில் சால்வையும் அரிமா சோமசுந்தரம் அழகுமீனாள் சின்னையா அம்பலம் சார்பில் விளையாட்டு சீருடையும், ஆசிரியர் இந்திரா காந்தி, ஆர்த்தி ஜவஹர் சார்பில் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. முடிவில் பயிற்சியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

முன்னதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாவதி ஆகியோரை விளையாட்டு குழுவினர் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்