கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

Update: 2022-09-07 12:04 GMT

போடிப்பட்டி,

மடத்துக்குளம் அருகே உள்ள கேடிஎல் வாழ்க வளமுடன் நகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி காளியம்மாள் (வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். இந்தநிலையில் நேற்று காலை அருகிலுள்ள தோட்டத்து கிணற்றில் காளியம்மாள் உடல் மிதந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் கயிறு கட்டி காளியம்மாள் உடலை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார் காளியம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்