மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி;

Update: 2023-04-16 12:24 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 73). இவர் ஓலப்பாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் வலசில் பனியன் வேஸ்ட் மூலம் பஞ்சு அறைக்கும் எந்திரம் போட்டு கடந்த 4 ஆண்டுகளாக தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ரங்கசாமி நேற்று தண்ணீர்பந்தல்வலசில் இருந்து ஓலப்பாளையம் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மற்றொரு ேமாட்டார்சைக்கிள் ரங்கசாமி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த அடிபட்ட ரங்கசாமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்