மணல்திட்டில் தவித்த அகதிகள்; இலங்கை கடற்படையினர் மீட்டனர்

தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் தவித்த 10-க்கும் மேற்பட்ட அகதிகளை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் ஏற்றி மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.;

Update:2022-08-05 23:12 IST

ராமேசுவரம், 

தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் தவித்த 10-க்கும் மேற்பட்ட அகதிகளை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் ஏற்றி மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் வாழ முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அது போல் இதுவரையிலும் தமிழகத்திற்கு 120-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் 10-க்கும் மேற்பட்ட அகதிகள் தவித்து வருவதாக மீனவர்கள் மூலம் கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் மணல் திட்டில் தவித்த அகதிகளை மீட்பதற்காக அங்கு சென்று உள்ளனர். ஆனால் அகதிகள் இறக்கிவிடப்பட்ட மணல் திட்டு இலங்கை கடல் எல்லை பகுதியோடு சேர்ந்தது என்பதால் இந்திய கடலோர காவல் படை கப்பல் அங்கு செல்ல முடியவில்லை.

மீட்பு

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 7-வது மணல் திட்டில் தவித்த 10-க்கும் மேற்பட்ட அகதிகளை மீட்டு கப்பலில் ஏற்றி மீண்டும் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்