அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

வந்தவாசி அருகே அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-01-18 10:08 GMT

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொட்டை கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி செந்தமிழ் முறைப்படி சிவனடியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.

பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவனடியார்கள் மேளங்கள் முழங்க கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதை தொடர்ந்து புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பின்னர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடத்தது.

இதில் வந்தவாசி மற்றும் பாதூர், கீழ்கொடுங்காலூர், மங்கல மாமண்டூர், அம்மன் பாக்கம், அதியனூர், அதியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் ஆதிகேசவன் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்