அகஸ்தியர்பட்டி பள்ளி மாணவர் சாதனை
மாநில விளையாட்டு போட்டியில் அகஸ்தியர்பட்டி பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் மாணவர் மகேஷ் நடராஜன் மாநில அளவில் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
சாதனை படைத்த மாணவர் மற்றும் பயிற்சியாளரை பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.