மீண்டும் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ஆரணியில் மீண்டும் கோவில் உண்டியலை உடத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்்சென்றுள்ளனர். திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஆரணி
ஆரணியில் மீண்டும் கோவில் உண்டியலை உடத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்்சென்றுள்ளனர். திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
உண்டியலை உடைத்து திருட்டு
ஆரணி நகரில் காந்தி ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த வழிாக செல்லும் பஸ்களை நிறுத்தி காணிக்கை செலுத்திவிட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் வழக்கம் போல கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணமூர்த்தி நேற்று கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலையில் உண்டியலில் பணம் செலுத்த சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறைகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விழாக்குழு தலைவர் சங்கர் விரைந்து சென்று பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
கேமராவில் பதிவு
அதைத்தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதிகாலை 3 மணி அளவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்களில் ஒருவன் வீடுகளுக்கு கம்பி கட்டும் கம்பியைக் கொண்டு கல் தூணில் கட்டப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை லுங்கியில் பிடித்துக் கொண்டு தப்பி ஓடியது பதிவாகி இருந்தது.
இது குறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் கோவில் நிர்வாகி சங்கர் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் திணறல்
ஆரணி நகரில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருட்டு, கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பும் உண்டியலை உடைத்து திருடிச்சென்றனர். இந்த நிலையில் மீண்டும் கோவில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உண்டியல் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார்திணறி வருகின்றனர்.