குழந்தையை கொன்றுவிட்டு, தாய் தற்கொலை

வேலூரை அடுத்த பென்னாத்தூரில் குடும்ப தகராறு காரணமாக குழந்தையை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.;

Update:2023-03-22 21:42 IST

குடும்ப தகராறு

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகே உள்ள கேசவபுரம், கரியன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 34), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தியா (27). இவர்களுக்கு கீர்த்திகா (2) என்ற பெண் குழந்தை இருந்தது. மணிவண்ணனுக்கும், சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது தவிர சந்தியாவுக்கும்,மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோருடனும் அடிக்கடி குடும்ப பிரச்சினை நடப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் குடும்ப தகராறு நடந்ததாக தெரிகிறது. நேற்று காலை மணிவண்ணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

குழந்தையை கொன்று, தாய் தற்கொலை

அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் வாழ்க்கையில் வெறிப்படைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத போது தனது மகள் கீர்த்திகாவை புடவை புடவையில் தூக்குமாட்டி கொலைா செய்து விட்டு, தானும் அதே புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் வீடு திறக்காமல் பூட்டி இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மணிவண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

மணிவண்ணன் தனது உறவினர்களுடன் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மனைவி சந்தியா மற்றும் மகள் கீர்த்திகா ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். துக்கம் தாளாமல் கணவன் கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்