85 ஆண்டுகளுக்கு பின்பு சாமுண்டேஸ்வரி கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
85 ஆண்டுகளுக்கு பின்பு சாமுண்டேஸ்வரி கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 கொடி மரங்கள் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரே உள்ள கொடிமர பிரதிஷ்டை 1938-ம் ஆண்டு செய்யப்பட்டது. மேலும் வள்ளி, தெய்வானை, முருக பெருமானுக்கு எதிரே உள்ள கோடிமரத்தில் 1968-ம் ஆண்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தற்போது கோவிலின் கோபுரங்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்த்து பணி நடைபெற்று வருகிறது. அப்போது இந்த கொடி மரங்களில் விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். எனவே, கோவில் நிர்வாகத்தினர் கொடி மரங்கள் இரண்டையும் மாற்றி புதியதாக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு 85 ஆண்டுகளுக்குப் பின்னர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரும், 55 ஆண்டுகளுக்குப் பின்னர் வள்ளி, தெய்வானை, முருக பெருமானுக்கும் எதிரும் 2 புதிய கொடி மரங்களை நட்டு பிரதிஷ்டை செய்தனர். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.