42 ஆண்டுகளுக்கு பிறகு கொரட்டி ஏரி நிரம்பியது ஆடு பலியிட்டு கிராம மக்கள் பூஜை

42 ஆண்டுகளுக்கு பிறகு கொரட்டி ஏரி நிரம்பியதால் கிராம பொதுமக்கள் ஆடு பலியிட்டு பூஜை நடத்தினர்.

Update: 2022-07-22 18:53 GMT

திருப்பத்தூர்

42 ஆண்டுகளுக்கு பிறகு கொரட்டி ஏரி நிரம்பியதால் கிராம பொதுமக்கள் ஆடு பலியிட்டு பூஜை நடத்தினர்.

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் கொரட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கொரட்டி, தண்டுகனூர், மைக்காமேடு, சின்னாரம்பட்டி, ஆதியூர், எலவம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது பெய்த மழையால் இந்த ஏரி 42 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி கோடி போகிறது. இதனை பார்க்க நேற்று காலை முதல் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். பலர் மீன்களை பிடித்து சென்றனர்.

42 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதையொட்டி ஆடு பலியிட்டு பூஜை செய்து ஏரியில் பூ தூவி வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே. எஸ்.அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆர்.குலோத்துங்கன், எஸ்.ராஜா, ஆர்.தசரதன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்