42 ஆண்டுகளுக்கு பிறகு அச்சமங்கலம் ஏரி நிரம்பியது
42 ஆண்டுகளுக்கு பிறகு அச்சமங்கலம் ஏரி நிரம்பி கோடிபோனது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரி 42 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி கோடிப்போனது.
அதைத் தொடர்ந்து அச்சமங்கலம் கிராம பகுதி மக்கள் தங்களது பழமை வாய்ந்த கல்வெட்டு குலச்சாமிக்கு பூஜை செய்து ஆடுகளை வெட்டி கொண்டாடினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, துணைத்தலைவர் அன்பழகன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.