30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஊரணி.. தண்ணீரில் இறங்கி பூரிப்படைந்த அமைச்சர்
பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஊரணியை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு, தண்ணீரில் இறங்கி மகிழ்ச்சி அடைந்தார்.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்னக்குளம் ஊரணியில், சமீபத்தில் 83 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு சின்னக்குளம் ஊரணி முழுமையாக நிரம்பியுள்ளது. இந்த நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஊரணியை நேரில் பார்வையிட்டு, தண்ணீரில் இறங்கி மகிழ்ச்சி அடைந்தார்.