கும்பக்கரை அருவியில் 14 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தேனி கும்பக்கரை அருவியில் 14 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2022-10-30 02:52 GMT

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சீராக வந்தது. இதனால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இன்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். கும்பக்கரை அருவியில் 14 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்