வன உயிரினங்களால் பாதிப்பு:நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-10 18:45 GMT

 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, தேனி மாவட்டத்தில் காட்டுயானை, கரடி, காட்டுப்பன்றி, காட்டெருமை, மான், மயில், குரங்குகள் போன்ற வன உயிரினங்களால் விவசாயிகளுக்கும், விளை பயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. வன விலங்குகளின் தாக்குதலில் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதித்த பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை கேரள அரசு போல் சுட்டு ஒழிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்