மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில்50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிப்புஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 50 பேர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-09-29 20:18 GMT

மேட்டூர்

மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 50 பேர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவலர் பயிற்சி பள்ளி

மேட்டூர் குள்ளவீரன்பட்டியில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் மட்டும் மேட்டூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 பேர் காவலர் பயிற்சி பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

காரணம் என்ன?

கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்புக்காக பயிற்சி பள்ளி காவலர்கள் சென்று வந்துள்ளனர். அதன்பிறகுதான் அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அவர்களுக்கு வந்துள்ளது என்ன வகையான காய்ச்சல் என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரிய வரும் என்று டாக்டர்க்ள கூறினர்.

எம்.எல்.ஏ. நலம் விசாரிப்பு

இதற்கிடையே மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பயிற்சி பள்ளி காவலர்களை சதாசிவம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். அப்போது, காவலர்களுக்கு போதுமான சிகிச்சையை விரைந்து அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக் கொண்டார்.

அவருடன் மேட்டூர் நகர பா.ம.க. செயலாளர் மதியழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்