சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தக்கோரி வக்கீல்கள் உண்ணாவிரதம்

சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தக்கோரி வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-07-05 19:37 GMT

திருச்சியில் வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து கோர்ட்டு வளாகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு திருச்சி வக்கீல்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கண்ணன், குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் சுரேஷ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் வக்கீல்கள் சுதர்சன், கராத்தே முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பின் (ஜாக்) தலைவர் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தானாக முன்வந்து எடுத்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். வக்கீல்களுடைய சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல் முசிறியில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்