'லிப்டை' சீரமைக்கக்கோரி மாற்றுத்திறனாளி வக்கீல்கள் தர்ணா

‘லிப்டை’ சீரமைக்கக்கோரி மாற்றுத்திறனாளி வக்கீல்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-15 19:27 GMT

கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு 3 மாடிகளை கொண்டது. இங்கு 10 கோர்ட்டுகள் உள்ளன. மாற்றுத்திறனாளி வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கோர்ட்டு வளாகத்தில் இயங்கி வந்த லிப்ட் கடந்த 6 மாதங்களாக பழுதடைந்து இயங்காமல் உள்ளது. இதை சீரமைக்கக்கோரி மாற்றுத்திறனாளி வக்கீல்கள் மணிசெந்தில், சக்திவேல் ஆகியோர் தலைமையில் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி சண்முகப்பிரியா அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் 2 வாரங்களில் புதிய லிப்ட் ஏற்பாடு செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்