வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தேனியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-18 18:45 GMT

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி வக்கீல்களை போலீசார் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கம் சார்பில் கருப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று தேனி வக்கீல்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்