வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-04 19:18 GMT

பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 58). மூத்த வக்கீல். மேலும் இவர் பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் (குற்றவியல்) செயலாளராகவும் உள்ளார். சம்பவத்தன்று சேகர் பெரம்பலூர் வெங்கடேசபுரம் அலுவலகத்தில் இருந்தபோது அண்ணாதுரை, குருசாமி ஆகியோர் அவரை தாக்கி, அலுவலகத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு சென்றனா். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் வக்கீல் சேகர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வக்கீல் பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பெரம்பலூர் வக்கீல் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்களும், அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்களும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று பணிகளை புறக்கணித்தனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இன்றும் (சனிக்கிழமை) கோர்ட்டுகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்