வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-23 12:55 GMT

தளி

இந்திய தண்டனைச்சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் உள்ளிட்ட முப்பெரும் சட்டங்களை மொழி மாற்றம் செய்து இந்தியில் திருத்தம் செய்வதாக கடந்த 11-ந் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்ட அமலாக்க மசோதாவை தாக்கல் செய்தது. மத்திய அரசின் இந்த முடிவை கைவிடக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சங்கங்களின் கூட்டுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி உடுமலை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் மசோதா நிறைவேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கச்சேரி வீதியில் உள்ள நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்கத்தலைவர் டி.ஆர். மனோகரன், செயலாளர் கே.எம்.ராஜேந்திரன், பொருளாளர் டி.பிரபாகரன் துணைத் தலைவர் சிவராமன் உள்ளிட்ட மூத்த, இளம் வக்கீல்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்