கந்துவட்டி வழக்கில் வக்கீல் கைது

பாளையங்கோட்டையில் கந்துவட்டி வழக்கில் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-20 19:07 GMT

இட்டமொழி:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் கந்தையா (வயது 40). வக்கீலான இவரிடம் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதற்கு கடந்த 2 மாதங்களாக அவர் வட்டி பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கந்துவட்டி கேட்டு மிரட்டி, தொழிலாளியின் மனைவியை கந்தையா அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து தொழிலாளி மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து தொழிலாளியின் மனைவியை கந்தையா விடுவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தையாவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்