தூய்மை பணியாளரை தாக்கிய வக்கீல் கைது

தூய்மை பணியாளரை தாக்கிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-13 21:50 GMT

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34). வக்கீலான இவரது வீட்டின் முன்பு சம்பவத்தன்று பெண் தூய்மை பணியாளர் ஒருவர் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த செல்வகுமார் அந்த பெண்ணிடம் தகராறு செய்து, அவரை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில், நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்