ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
கீழ்பென்னாத்தூர் ஒ்றநிய அலுவலகத்தில் ராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது,
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஒ்றநிய அலுவலகத்தில் ராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது,
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் 2020-21, 2021-2022-ம் நிதியாண்டுகளுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 45 ஊராட்சிகளுக்கு சமூக தணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி தலைமையில் நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட வன அலுவலர் ரமண ஜோதி முன்னிலை வகித்தார்.
ஊராட்சிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பயனாளிகளிடம் 100 நாள் வேலை திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலட்சுமி, அப்துல்கபார், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், பணி மேற்பார்வையாளர்கள் உமா, கண்ணன் மற்றும் வட்டார வள அலுவலர்கள் கலந்து கொண்டனர்=