அரசு வக்கீல்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

அரசு வக்கீல்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-05-26 19:31 GMT

அரசு வக்கீல்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து அறநிலையத்துறை தொடர்பான ஏராளமான வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

நீண்டநாளாக இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண்பது எப்படி? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை கருப்பாயூரணியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் கே.வி.முரளிதரன், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது ஐகோர்ட்டு வழக்குகளுக்கு விரைவான தீர்வு காண்பது தொடர்பான இந்த கூட்டம்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை இதே போன்ற ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை அரசு வக்கீல்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் அறநிலையத்துறையை சேர்ந்த கூடுதல் கமிஷனர் திருமகள், இணை கமிஷனர் ஜெயராமன், மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றும் சிறப்பு அரசு பிளீடர் சுப்பராஜ், கூடுதல் அரசு பிளீடர் ஏ.கண்ணன், அரசு வக்கீல் செந்தில் அய்யனார் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என 350-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்