தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

போக்குவரத்துக்கழக பணிமனையில் தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-04-10 20:53 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டலம் பாபநாசம் பணிமனையிலிருந்து இயக்கப்படும் பஸ்களை அதிக கிலோ மீட்டர் தூரத்தில் இயக்க கட்டாயப்படுத்துவது, நகர பஸ்களை மாற்று வழித்தடத்தில் இயக்குவது உள்ளிட்ட குறைகள் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு எ.டி.பி. பாபநாசம் பணிமனை செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், நெல்லை மாவட்ட கலெக்டர், அரசு போக்குவரத்துக் கழகம், தொழிலாளர் நலத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட புகார் மனுவிற்கு வருகிற 16- ந் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 17-ந் தேதி அதிகாலை அனைத்து பஸ்களையும் பணிமனையில் நிறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது, என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் எ.டி.பி. சங்கம் அய்யப்பன், ஜே.டி.எல். அருணாச்சலம், சி.ஐ.டி.யு. புதியசுவாமி, ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் குமாரசாமி, டி.டி.எஸ். முத்துகிருஷ்ணன் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்