ஆலோசனை கூட்டம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வருகிற 6-ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இத்தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு கண்காணிப்பு அதிகாரி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்வு மைய அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி மற்றும் மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.