தேரோட்டம், தெப்பத்திருவிழா ஆலோசனை கூட்டம்

சிவகிரியில் தேரோட்டம், தெப்பத்திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-29 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் வருகிற 3-ந்தேதியும், தெப்பத்திருவிழா 4-ந்தேதியும் நடைபெறுகிறது. விழாவை சிறப்பாக நடத்திட சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிவகிரி தாசில்தார் பழனிசாமி தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, மண்டல துணைத்தாசில்தார் சிவப்பிரகாசம், தலைமை இடத்து துணைத்தாசில்தார் சரவணன், சிவகிரி பேரூராட்சி நிர்வாக அதிகாரி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தேரோட்டம், தெப்பத்திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அதிகமாக வைத்து கண்காணிக்க விழா கமிட்டியினர் மற்றும் காவல் துறையினரை கேட்டுக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அதிக அளவிலான மின்விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும், தேர் வலம்வரும் நான்கு ரத வீதிகளில் தேர் செல்வதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சிவகிரி ஜமீன்தார் சேவுகப்பாண்டியன் என்ற விக்னேஸ்வர சின்ன தம்பியார், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்