பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம்
சிங்கம்புணரில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரி கண்ணையா மகாலில் நடைபெற்ற சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி மற்றும் இல.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ஸ்ரீகேசவ விநாயகம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்களிடம் குறைகள் குறித்தும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள்,சிங்கம்புணரி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.