வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-01-11 18:45 GMT

ராமநாதபுரம் தொழிலாளர் நலத்துறை சார்பில் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பான மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை மத்திய அரசின் கீழ் உருவாக்கப்பட்ட e-SHRAM வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும், பணி நேரத்தில் அவர்களுக்கு உரிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரவும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் நிறுவனங்களில் சமவாய்ப்பு கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை தாமதமின்றி ISMW Online Porta-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த தகவலை ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் பாரி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்