குழந்தைகளுக்கு துணை உணவு அளிப்பது குறித்த ஆலோசனை

குழந்தைகளுக்கு துணை உணவு அளிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது.

Update: 2023-10-04 18:12 GMT

கரூர் மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியமாக தோகைமலை வட்டாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் கண்டறியப்பட்டுள்ள 112 பின்தங்கிய மாவட்டங்களில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது. வட்டாரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கமாக கடந்த மாதம் 30-ந்தேதி அன்று காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து முதல் கட்டமாக தமிழக அரசு வழிகாட்டுதல்களின்படி கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுப்படி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சுபோசித் பரிவார் -போஷன் மீல்ஸ் என்ற தலைப்பில் 181-வது நாள் ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு துணை உணவு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டது. இதில் தோகைமலை வட்டாரத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் 114 அங்கன்வாடி மையங்களில் 264 பயனாளிகளுக்கு நடத்தப்பட்டது. மேலும் வளர்ச்சி நிலை கண்காணிப்பு (6 மாத குழந்தைகள்), உணவு கண்காட்சி, உணவு செய்முறை விளக்கம், ஊட்டசத்து பெட்டகம் மற்றும் திட்டம் தொடர்பான ஊர்வலமும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்