ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி நகராட்சியில் முன்னேற்பாடுகள் தீவிரம்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி நகராட்சியில் முன்னேற்பாடுகளை நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Update: 2022-07-15 09:27 GMT

திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஆடிக்கிருத்திகை திருவிழா நடைப்பெற உள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் காவடி எடுத்துவந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர், திருத்தணி ஆர்.டி.ஒ. ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம் உத்தரவின் பேரில் நகராட்சியில் எரியாமல் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சியில் பல்வேறு இடங்களில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் சரிசெய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்