முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-15 12:20 GMT

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக முதியோர் களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் வசந்தி ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்