முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. அதில் அனைத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்திய குடிமகன், குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் என்றும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் எனக்கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.