குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி வாசிக்க, பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர்.