வாலிபர் தற்கொலை

குற்றாலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-06-26 18:52 GMT

குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் வல்லப விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சிகாமணி மகன் கருப்பசாமி (வயது 27). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் அதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருப்பசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்