காவிரி ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு

குமாரபாளையம் காவிரி ஆற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.

Update: 2022-12-26 18:46 GMT

குமாரபாளையம்

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் பாரியூரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ஸ்ரீஹரிஹரன் (வயது 34) திருமணம் ஆகாதவர். தொழிலாளி. இவர் நேற்று பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்துவிட்டு பின்னர் தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் நடந்து சென்றார். அப்போது பாலத்தின் மேல் இருந்து காவிரி ஆற்றில் தவறி விழுந்து விட்டார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு பேரிடர் மீட்பு குழு நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஹரிஹரனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் விசாரணைக்காக குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்