நொய்யல் அருகே உள்ள புங்கோடை குளத்துபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் கொல்லிமலை மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராமலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மோகன்ராஜை தேடி வருகின்றனர்.