மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள அற்பிசம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் பிரபு(வயது 36). இவருக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், கீர்த்திகா(3), கார்த்திகா(2) என்ற 2 மகள்களும் உள்ளனர். பிரபு, வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சில வாத்துகள் நோய்வாய்பட்டு இறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட அவர் சம்பவத்தன்று மதுவில் விஷத்தை கலந்து குடித்துவிட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரபுவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.