அ.தி.மு.க. தொண்டர் திடீர் சாவு

அ.தி.மு.க. தொண்டர் திடீெரன இறந்தார்.

Update: 2023-08-21 18:55 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கே. லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கடற்கரை (வயது63). அ.தி.மு.க. தொண்டரான இவர் நேற்றுமுன்தினம் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் இறந்தார்.

இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தங்கவேலு, மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி ஆகியோர் கடற்கரையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்