அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கட்சியினர் கொடியேற்றி கொண்டாட வேண்டும் எனஎஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கட்சியினர் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-15 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.இ.அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கு இணங்க, அ.தி.மு.க. தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணிக்கு டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பகிறது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெரு, அண்ணாநகர் 7-வது தெரு சந்திப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

மேலும் நாளை ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவப் படங்களுக்கு மரியாதை செய்தும், கட்சி கொடிகளை ஏற்றியும் கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எ!ஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்