அ.தி.மு.க. நிர்வாகியிடம் ரூ.40 ஆயிரம், மொபட் பறிப்பு

நெல்லையில் அ.தி.மு.க. நிர்வாகியிடம் ரூ.40 ஆயிரம், மொபட் பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-20 19:10 GMT

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் அப்துல்சமது (வயது 52). அ.தி.மு.க. நிர்வாகியான இவர் தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்கு சில பொருட்கள் வாங்க நேற்று காலையில் வண்ணார்பேட்டைக்கு மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அவர் மாவட்ட அறிவியல் மையம் அருகே வந்த போது, காரில் வந்த 2 பேர் அப்துல்சமதுவை வழிமறித்து அவரை கீழே தள்ளி விட்டனர். பின்னர் அவர்களில் ஒருவர் அப்துல்சமது ஓட்டி வந்த மொபட்டை ஓட்டிக்கொண்டு சென்று விட்டார். மற்றொருவர் காரில் நெல்லை டவுன் பகுதியை நோக்கி சென்று விட்டாராம். அந்த மொபட்டில் பொருட்கள் வாங்க வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் செல்போன் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்