ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகேஅ.தி.மு.க. பேனர்கள் கிழிப்புநிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு

ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-17 18:45 GMT


ரெட்டிச்சாவடி, 

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் பேனர்கள் வைத்திருந்தனர். நேற்று காலை விழா நடைபெறும் இடத்துக்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வைத்திருந்த பேனர்களை பார்த்தபோது, அதை யாரோ மர்ம நபர்கள் கிழித்து இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கே அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் பேனர்களை கிழித்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பேனர்களை கிழித்த மர்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்ற சம்பவம் ரெட்டிச்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்