அ.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு

அ.தி.மு.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-08-14 19:27 GMT

சிவகாசி, 

சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தபால் நிலையம் அருகில் இருக்கும் மின்மாற்றியில் அ.தி.மு.க. கட்சி கொடி கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார்.

இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் (ஓ.பி.எஸ்.பிரிவு) கேஸ்குட்டி என்பவர் உரிய அனுமதியின்றி கட்சி கொடியை மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) கட்டியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்