அ.தி.மு.க. கவுன்சிலரை அவதூறாக பேசியதி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

கம்பத்தில் அ.தி.மு.க. கவுன்சிலரை அவதூறாக பேசிய தி.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-05-09 18:45 GMT

கம்பம் மாலையம்மாள்புரம் 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மாதவன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது வார்டில் கடந்த 3-ந்தேதி புதிய ரேஷன் கடையை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த கடை திறப்பு விழாவையொட்டி அந்த பகுதி பொதுமக்கள் எனக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டினர்.

இதனை பார்த்த கம்பம் வடக்கு தி.மு.க. நகர துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகி அறிவழகன் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு எம்.எல்.ஏ. புகைப்படம் இல்லாமல் எப்படி போஸ்டர் ஒட்டலாம் என கூறி அவதூறாக பேசினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராமகிருஷ்ணன், அறிவழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்