அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனார்.

Update: 2023-01-31 15:33 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனார்.

தரையில் அமர்ந்து போராட்டம்

திருவண்ணாமலை தாலுகா சு.நல்லூர் கிராமத்தில் உள்ள தண்டரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், விவசாயி. மேலும் இவர், அந்த கிராமத்தில் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் பிரகாஷ் தனது குடும்பத்தினர் மற்றும் சிலருடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரகாஷ் மனைவி சவுமியா கூறுகையில், 'எனது கணவர் கடந்த 17-ந்தேதி நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக 3 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. இதில் அவருக்கு வலது கை எலும்பு உடைந்துவிட்டது. மேலும் அவர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து வெறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எங்களை அலைகழித்து வருகின்றனர். மேலும் உண்மைக்கு மாறான தகவல்களை வைத்து எங்கள் மீது பொய்யான வழக்கை பதிவு செய்த போலீசார் மீதும் கணவரை தாக்கியவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதையடுத்து போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்