வேலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-19 19:25 GMT

வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், இணை செயலாளர் சுகன்யாதாஸ், துணை செயலாளர் ஜெயபிரகாசம், காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், நிர்வாகி பி.எஸ்.பழனி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்