தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அமைப்புச் செயலாளர் பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் சுடலை வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், சாம்பவர் வடகரை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி. மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாத பாண்டியன், முன்னாள் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.