கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-25 15:40 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ‌ மின் கட்டணத்தை உயர்த்திய தற்கு கண்டனம் தெரிவித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு ஆகியவற்றை கண்டித்து கட்சியினர் அரிக்கேன் விளக்கினை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினா். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் சீனிராஜ், எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்